search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ் ஜானகி"

    பிரபல பாடகி எஸ்.ஜானகி புதுமுகங்கள் நடிக்கும் பண்ணாடி படத்திற்காக தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார். #SingerSJanaki #Pannadi
    மூத்த பின்னணி பாடகி எஸ்.ஜானகி பாடல்கள் பாடுவதை நிறுத்தி ஓய்வில் இருக்கிறார். விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தில் ஒரு காட்சியில் நடித்து கொடுத்தார். அந்த காட்சி படத்தில் இடம்பெறாமல் இணையத்தில் வெளியானது. 

    இந்நிலையில், முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் “பண்ணாடி’. இப்படத்தை டி.ஆர்.பழனிவேலன் இயக்கி வருகிறார். இவர், கிராமியக் கதைகளுக்குப் பெயர் பெற்ற இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரின் மாணவர். இப்படத்தின் சில பாடல்களை ஜானகியம்மா பாடினால் நன்றாக இருக்கும் என படக்குழுவினர் விரும்பி உள்ளனர். 



    ஆனால், அவர் ஏற்கனவே இனிப் பாடுவதில்லை என ஓய்வை அறிவித்து விட்டதால், அவர் பாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக அவர்கள் ஜானகியிடம் கேட்டுள்ளனர். அவரும் இளைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காக இரண்டு பாடல்களைப் பாடிக் கொடுத்துள்ளார். இதனால் ‘பண்ணாடி’ படக்குழு நெகிழ்ந்து போயுள்ளது. விரைவில் அந்த இரண்டு பாடல்களையும் வெளியிட உள்ளனர்.
    பிரபல பாடகி எஸ்.ஜானகி பற்றி வரும் வதந்திகள் பரப்பியவர்களை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள். #SJanaki
    பிரபல சினிமா பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார். எஸ்.ஜானகி 4 தேசிய விருதுகள் பெற்றுள்ளார். அவருக்கு தற்போது 80 வயது ஆகிறது. மகன் முரளி கிருஷ்ணாவுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். 

    3 வாரங்களுக்கு முன்பு எஸ்.ஜானகிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினார். அதன்பிறகு அவரது உடல் நிலைகுறித்து அடிக்கடி வதந்திகள் பரவியது. கடந்த வாரம் 3–வது தடவையாக வதந்தி பரப்பப்பட்டது. ‘‘நான் நலமாக இருக்கிறேன். எனது உடல் நிலை குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்’’ என்று எஸ்.ஜானகி வேண்டுகோள் விடுத்து வீடியோவில் பேசி வெளியிட்டார்.

    இந்த நிலையில் எஸ்.ஜானகி உடல் நிலை குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மலையாள சினிமா பின்னணி பாடகர்கள் சங்கத்தினர் கேரள போலீசில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து வதந்தி பரப்பிய வி‌ஷமிகளை கைது செய்யும்படி சைபர் கிரைம் போலீசுக்கு கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்னாத் பெஹரா உத்தரவிட்டு உள்ளார். 

    சைபர் கிரைம்போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்.ஜானகி உடல்நிலை குறித்த வதந்தி தமிழ் நாட்டில் இருந்து பரவியதா? அல்லது ஆந்திரா, கேரளாவில் இருந்து பரப்பப்பட்டதா? என்று விசாரணை நடத்துகின்றனர்.
    ×